Thursday, October 31, 2024

பென்சில் கலை ( Pencil Art)



கரிக்கோல்

கரிக்கோல் அல்லது காரெழுதுகருவி (pencil) என்பது ஒரு குறியிடும் உள்ளகமும் நெகிழி அல்லது மரத்தால் ஆன வெளியுறையும் கொண்ட ஒரு எழுதும் அல்லது கலைச் சாதனம் ஆகும். வெளியுறையானது கரிக்கோலை உடையாமல் இருக்கவும் பயனரின் கைகளுக்கு சிரமம் உண்டாகாமல் இருக்கவும் அமைகிறது.

கரிக்கோல்கள் தேய்வு மூலம் குறியிடும் உள்ளகம் காகிதத்தின் மேல்பரப்பில் ஒட்டி குறிகளை ஏற்படுத்துகின்றன. கரிக்கோல்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் எழுதுகரியால் (Graphite) ஆன உள்ளகத்தால் ஆனவை. இக்குறிகளை எளிமையாக அழிப்பான்கள் மூலம் அழிக்கக்கூடியவை. எழுதுகரி கரிக்கோல்கள் (Graphite Pencils) வரைவதற்கும் எழுதுவதற்கும் பயனாகின்றன. வண்ணக் கரிக்கோல்களில் (Colour Pencils) மெழுகு கலக்கப்படுகின்றன. இவை பளப்பளப்பான குறிகளை விடுவிக்கின்றன. பெரும்பாலுமான கரிக்கோல்களின் வெளியுறை மரத்தால் ஆனவை. கரிக்கோலைப் பயன்படுத்த, வெளியுறை சீவிவிடப்பட்டு நுனி கூர்மைப்படுத்தப்படுகிறது. .

பொறிமுறைக் கரிக்கோல்கள் (Mechanical Pencils) நெகிழியால் ஆன வெளியுறை கொண்டுள்ளன. இவைகளில் ஒரு பொத்தான் மூலம் எழுதுகரி உள்ளகத்தை வெளியில் நீட்டவோ அல்லது மீள்ப்படுத்தவோ செய்யப்படுகிறது.


பென்சில் கலை

பென்சில் கலை அல்லது பென்சில் வரைதல் என்பது பென்சிலைப் பயன்படுத்தி படங்களை உருவாக்கும் கலை.

கரி பென்சில்களைப் பயன்படுத்தி, கலைஞர்கள் தங்கள் கைகளாலும் நன்கு பயிற்சி பெற்ற திறமைகளாலும் அழகான வரைபடங்களை உருவாக்க முடியும்.

17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பென்சில் வரைபடங்கள் அறியப்படவில்லை, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பென்சில் வரைபடங்களின் நவீன கருத்து வடிவம் பெற்றது. கிராஃபைட்டுக்குப் பதிலாக உலோகத்தைப் பயன்படுத்திய பழைய மெட்டல்பாயிண்ட் டிராயிங் ஸ்டைலஸுக்குப் பிறகு பென்சில் வரைபடங்கள் வெற்றி பெற்றன.

நவீன கலைஞர்கள் கிராஃபைட் பென்சிலை கலைப்படைப்புகள் மற்றும் ஓவியங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"